FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் ஆட்டோ தொழிற்சங்க கூட்டம்

அகில இந்திய அளவில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஜன. 8, 9 ஆகிய நாள்களில் போராட்டம்

Updated On : 31 டிசம்பர் 2018, 9:47 am IST
பகிர்:

அகில இந்திய அளவில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஜன. 8, 9 ஆகிய நாள்களில் போராட்டம் நடைபெற உள்ளதையடுத்து, குமரி மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் சிஐடியூ அலுவலகத்தில் நடைபெற்றது. 
கூட்டுக்குழு அமைப்பாளர் சிவகோபன் தலைமை வகித்தார். இதில், சிஐடியூ ஆட்டோ சங்கத் தலைவர் மரியஸ்டீபன், செயலர் பொன்.சோபனராஜ், துணைத் தலைவர் அந்தோணி, பெருமாள், தொமுச சார்பில் ஜலீல், பேச்சிமுத்து,  அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முருகன், சேகர், அண்ணாதுரை, சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்; பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆட்டோ ஓட்டுநர்கள் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  ஜன. 3 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் ம னு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் வருகிற 8, 9ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் இம்மாவட்டத்தில் உள்ள 13  ஆயிரம் ஆட்டோக்களும் பங்கேற்பது;  8ஆம் தேதி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments