அல்போன்சா பள்ளி சார்பில் கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள்
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நாகர்கோவில் அல்போன்சா பள்ளி சார்பில் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நாகர்கோவில் அல்போன்சா பள்ளி சார்பில் நிவாரண நிதி மற்றும் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள மக்களுக்கு உதவும் விதமாக, பள்ளியில் கடந்த 2 வாரங்கள் ஈகை வாரங்களாக அனுசரிக்கப்பட்டு, மாணவர்கள் வழங்கிய நிதி உதவி மற்றும் நிவாரணப் பொருள்கள், ஆசிரியர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் அளித்த ஒருநாள் ஊதியம் ஆகியவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட அனைத்து நிவாரணப் பொருள்களும் கேரளத்தின் குட்டநாடு பகுதிக்கு தக்கலை சீறோமலபார் மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் மூலம் அனுப்பப்பட்டது.
இந்தப் பணிகள் அல்போன்சா பள்ளித் தாளாளர் தாமஸ் பெளவத்துப்பறம்பில் மற்றும் பள்ளி முதல்வர் லிசபெத் ஆகியோரின் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்டது.
சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை சீர்படுத்தி அனுப்பும் பணியில் பள்ளியின் துணை முதல்வர்கள் அஜின்ஜோஸ், பிரேம்கலா, தலைமையாசிரியர் மோனிக்கா ஸ்பினோலா ஆகியோர் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.