என்.ஐ. பல்கலைக்கழகத்தில் ரோபோட்டிக் மைய தொடக்க விழா
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் க்ளவ்டு கம்ப்யூட்டிங் மற்றும் ரோபோட்டிக் மைய தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் க்ளவ்டு கம்ப்யூட்டிங் மற்றும் ரோபோட்டிக் மைய தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் ஏ.பி.மஜீத்கான் குத்துவிளக்கேற்றி க்ளவ்டு கம்ப்யூட்டிங் மற்றும் ரோபோட்டிக் மையத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.பெருமாள்சாமி, பதிவாளர் திருமால்வளவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிருஷ்ணன், மனிதவள மேம்பாட்டு இயக்குநர் ஜனார்த்தனன், கல்வி விவகாரத் துறை இயக்குநர் சாஜின் நற்குணம் , நியுசட் திட்ட இயக்குநர் கிருஷ்ணசுவாமி, இயக்குநர் இரத்தினநாடார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடக்க விழா நிகழ்ச்சிகளை க்ளவ்டு கம்ப்யூட்டிங் உதவியுடன் மாணவர்கள் நேரலையாக பல்கலைக்கழக அரங்கில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் நலன் கருதி தென்தமிழகத்தில் முதல் முறையாக தொழில்நுட்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் முதன்மை பிரிவுகளான ஹூமநாய்ட் ரோபோட்டிக் மையத்துடன் க்ளவ்டு கம்ப்யூட்டிங் மையத்தையும் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இலவசமாக பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விரண்டு மையங்களின் சிறப்புகள் குறித்து கல்வி விவகாரத் துறை இயக்குநர் சாஜின் நற்குணம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், தங்களது அல்லது வீட்டில் இருக்கும் முதியவர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு, அதாவது மருத்துவருக்கோ, முதியவர்களைப் பராமரிக்கும் நபர்களுக்கோ ரோபோ தெரியபடுத்தும். சுயமாக மனிதன் சிந்திப்பதுபோல் சிந்தித்து இது செயல்படும். அத்துடன் நாம் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் இணையம் மற்றும் க்ளவ்டு கம்ப்யூட்டிங் மூலம் சரியான விடைகளைத் தந்து உதவும்.
மனிதர்கள் நேரடியாக செயல்பட முடியாத இடங்களிலும், பேரிடர் மீட்பு உதவிகளுக்கும், இயந்திர மனிதர்களைப் பயன்படுத்த தொழில்நுட்பங்கள் ஆராயப்படுவதுடன் ஆராய்ச்சி மாணவர்களுக்கு புதிய உத்திகளைக் கண்டறிய இந்த மையம் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக வேந்தர் அறிவுரையின்படி, மக்கள் தொடர்பு அலுவலர் ராமதாஸ் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.