பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குலசேகரம் மற்றும் திருவட்டாறில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குலசேகரம் மற்றும் திருவட்டாறில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்தாஸ், வட்டார செயலர் விஸ்வம்பரன், வட்டார குழு உறுப்பினர்கள் ஸ்ரீகுமார், ஜூடஸ் குமார், நடராஜன் உள்ளிட்டோர் பேசினர். கட்சி நிர்வாகிகள் நாணுகுட்டன், ராபிதாஸ், தங்கையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். சேகர் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். திருவட்டாறில் நடைபெற்ற போராட்டத்துக்கு வட்டாரச் செயலர் ஆர். வில்சன் தலைமை வகித்தார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர் சகாய ஆன்டனி பேசினார். வட்டாரக் குழு உறுப்பினர்கள் தங்ககுமார், பென் ஜாக்கப், மணியன் ஜோஸ் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அண்ணாதுரை போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.