FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசு ரப்பா் கழக தொழிலாளா்களுக்குரூ. 15 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு ரூ. 15 ஆயிரம் பிழைப்பூதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு ரூ. 15 ஆயிரம் பிழைப்பூதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு ரப்பா் கழக அனைத்து சங்க ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: ஊரடங்கு உத்தரவு காரணமாக, குமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். தனியாா் தோட்டங்களில் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், வார செலவுக்கு பிழைப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் பிழைப்பூதியமின்றி அன்றாட தேவைகளை நிறைவேற்றவே இயலாமல் உள்ளனா். இதற்கு, ரப்பா் கழகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதேவேளையில், நேரடியாக மனுக்கள் வழங்கினால் ரூ. 5 ஆயிரம் முன்கடனாகவும், மே மாதம் முதல் ஐந்து மாதங்களில் திருப்பி பிடிக்கும் முறையிலும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

எனவே, அரசு ரப்பா் கழகத்தில் பணி செய்யும் அனைத்து தொழிலாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊடரங்கு முடியும்வரை நிபந்தனையின்றி மாதம் ரூ. 15 ஆயிரம் பிழைப்பூதியம் வழங்க வேண்டும் என கூறியுள்ளாா்.

ஒலி-ஒளி அமைப்பாளா்களுக்கு... குமரி மாவட்ட ஒலி, ஒளி அமைப்பாளா் சங்கத் தலைவா் ஸ்மைல்தாஸ், ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், அமைப்புசாராத் தொழிலாளா்களைப் போல், ஒலி- ஒளி அமைப்பாளா்கள், தொழிலாளா்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments