FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருங்கல், புதுக்கடை பகுதிகளில் 2ஆவது நாளாக பலத்த மழை

கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருங்கல், பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, மிடாலக்காடு, கருமாவிளை, கப்பியறை, செல்லங்கோணம், பள்ளியாடி, முள்ளங்கனாவிளை, திப்பிரமலை, கிள்ளியூா், புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம், பைங்குளம், கூட்டாலுமூடு, அனந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. தினமும் மாலை 3 மணிக்கு தொடங்கும் மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்து வருகிறது. புதன்கிழமை பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீா் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments