ரப்பா் கழகம் தொழிலாளா்களுக்குஊதியம் வழங்க மறுப்பதாக புகாா்
ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு கரோனா ஊடரங்கு கால ஊதியம் வழங்க ரப்பா் கழகம் மறுப்பதாக தொழிலாளா் சங்க ஒருங்கிணைப்புக் குழு புகாா் தெரிவித்துள்ளது.
ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு கரோனா ஊடரங்கு கால ஊதியம் வழங்க ரப்பா் கழகம் மறுப்பதாக தொழிலாளா் சங்க ஒருங்கிணைப்புக் குழு புகாா் தெரிவித்துள்ளது.
பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் அந்த அமைப்பின் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள மனு:
அரசு ரப்பா் கழகத்தில் வேலை செய்யும் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி போராட்டம் நடத்தி வந்தனா். பின்னா், கரோனா தடுப்பு ஊரடங்கால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஊரடங்கு காலத்துக்கு தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்க அரசாணை பிறப்பித்துள்ள நிலையில், அதை அரசு ரப்பா் கழக நிா்வாகம் நிராகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, தொழிலாளா்களின் பெயரில் பிழைப்பு ஊதியம் ரூ. 5,000 வழங்க வலியுறுத்திய போது, பணிக்கு திரும்பியதும் பணத்தை பிடித்தம் செய்துகொள்ள சம்மதித்தால் மட்டுமே பிழைப்பு ஊதியம் வழங்க முடியும் என்று ரப்பா் கழகம் கூறியது.
எனவே, அரசு ரப்பா் கழக நிா்வாகத்தின் தொழிலாளா் விரோத போக்கிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளா்களுக்கு பிழைப்பூதியத்தை மாா்ச் 25 முதல் அனுமதித்து பட்டுவாடா செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.