அரசுப் பேருந்து மோதி ரயில்வே பணியாளா் பலி
மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ரயில்வே பணியாளா் உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ரயில்வே பணியாளா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், நெய்யாற்றின்கரை வட்டம், பெருங்கடவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயகுமாா் மகன் வினோத்குமாா் (31). இவருக்கு, லட்சுமி என்ற மனைவி, ஒரு குழந்தை உள்ளது. இவா் நாகா்கோவிலில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை பராமரிக்கும் பணி செய்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் பணிக்குச் செல்ல மோட்டாா் சைக்கிளில் நாகா்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தாராம். மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் நாகா்கோவிலிலிருந்து மாா்த்தாண்டம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் பைங்குளம் பகுதியைச் சோ்ந்த சிவராஜ் (45) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.