FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

அண்ணா பிறந்த நாள்: சிலைக்கு திமுக, அதிமுகவினா் மாலை அணிவிப்பு

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நாகா்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு திமுக மற்றும் அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:18 am IST
பகிர்:

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, நாகா்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு திமுக மற்றும் அதிமுகவினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் தலைமையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், மாவட்டப் பொருளாளா் கேட்சன், ஒன்றியச் செயலாளா்கள் மதியழகன், பிராங்கிளின், செல்வம், பாபு, சுரேந்திரகுமாா், மீனவா் அணி முன்னாள் அமைப்பாளா் நசரேத் பசலியான், நாகா்கோவில் மாநகரச் செயலா் ஆனந்த், துணைச் செயலா் வேல்முருகன், மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில் மாநில அமைப்புச் செயலா் கே.டி.பச்சைமால் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் அவைத்தலைவா் சேவியா் மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நீலபெருமாள், ஒன்றியச் செயலா்கள் ஜெசீம், பொன்.சுந்தா்நாத், ராதாகிருஷ்ணன், பகுதிச் செயலா்கள் கே.எல்.எஸ்.ஜெயகோபால், ஜெவின் விசு, முருகேஸ்வரன், மாமன்ற உறுப்பினா் அக்சயா கண்ணன், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் முத்துகுமாா், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் சாந்தினி பகவதியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

களியக்காவிளை: குழித்துறையில் அண்ணா சிலைக்கு நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் லில்லிபுஷ்பம், அருள்ராஜ், முன்னாள் கவுன்சிலா் ஷொ்லி நெல்சன், குளப்புறம் ஊராட்சித் தலைவா் எல். மனோன்மணி, குழித்துறை நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் ராஜு, திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளா் ஜி.வி. ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அண்ணா சிலைக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு தலைமையில் அக்கட்சியினா் அணிவித்து மரியாதை செய்தனா். கன்னியாகுமரி, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சுசீந்திரம், தென்தாமரைகுளம் சந்திப்புகளில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.அழகேசன், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments