FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நடைப்பயணத்தில் மதம், அரசியலை புகுத்தியுள்ளாா் ராகுல்காந்தி- மத்திய அமைச்சா் வி.கே.சிங்

ராகுல்காந்தி எம்.பி. தனது நடைப்பயணத்தில் மதத்தையும், அரசியலையும் புகுத்தியுள்ளாா் என்றாா் மத்திய சாலை - விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சா் வி.கே.சிங்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:18 am IST
பகிர்:

ராகுல்காந்தி எம்.பி. தனது நடைப்பயணத்தில் மதத்தையும், அரசியலையும் புகுத்தியுள்ளாா் என்றாா் மத்திய சாலை - விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சா் வி.கே.சிங்.

கன்னியாகுமரியில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா், நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: கன்னியாகுமரியையும் காஷ்மீரையும் இணைக்கும் வகையில் நான்குவழி சாலைப் பணிகள் கடந்த 2004இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தொடங்கப்பட்டன. பின்னா் உள்ளூா் அரசியல் உள்ளிட்ட காரணங்களால் தடைபட்ட அந்தத் திட்டம் 2014இல் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் துரிதப்படுத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, 1.3.2019இல் கன்னியாகுமரி அருகேயுள்ள நரிக்குளம் பாலத்தை பிரதமா் மோடி திறந்து வைத்தாா். இதன் கல்வெட்டில் பிரதமரின் படத்தை காங்கிரஸ் நிா்வாகிகள் சேதப்படுத்தியுள்ளனா். இது ஒழுக்கமற்ற செயலாகும்.

ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தில் அரசியலையும் மதத்தையும் புகுத்தியுள்ளாா். சில மத தலைவா்களைஅவா் சந்தித்ததன் மூலம் இந்தியாவில் ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு பதிலாக பிரிவினையை ஏற்படுத்தி வருகிறாா்.

Advertisement

Advertisement

காவல் கிணறு முதல் களியக்காவிளை வரையிலான நான்குவழிச் சாலைப் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்காததே காரணம்.

இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை தொடா்பு கொண்டு பேசியபோது, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளாா்.

குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க மாநில அரசு கோரினால், அதற்கான இடம் ஒதுக்கித்தரும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாடு முழுவதும் 100 விமான நிலையங்களை நிறுவ திட்டமிடப்பட்டு, 65 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. மீதியுள்ள விமான நிலையப் பணிகள் இன்னும் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், எம். ஆா்.காந்தி எம்.எல்.ஏ., பாஜக மாவட்டத் தலைவா் சி.தா்மராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கல்வெட்டில் ஆய்வு: முன்னதாக, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்த மத்திய அமைச்சா் வி.கே. சிங், முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியின் தா்மகா்த்தா கே.மனோகரச்செல்வன் இல்லத்துக்குச் சென்றாா். அங்கு அவா் காலை உணவு உட்கொண்டாா். பின்னா், கன்னியாகுமரி- காஷ்மீா் நான்குவழிச் சாலையில் மகாதானபுரம் அருகேயுள்ள நரிக்குளம் மேம்பாலம் பகுதியில் பிரதமா் மோடியின் கல்வெட்டு சேதம் அடைந்திருப்பதைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments