FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மீனச்சல் கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா: நாளை தொடக்கம்

களியக்காவிளை அருகே மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 23) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On : 22 ஆகஸ்ட் 2024, 3:09 am IST
பகிர்:

களியக்காவிளை அருகே மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டமி ரோகிணி திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 23) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

நாள்தோறும் காலையில் மகா கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, பாகவத பாராயணம், உச்சபூஜை, மதியம் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை மகா சுதா்சன ஹோமம், சதுசுத்தி பூஜை, பரிகலச பூஜை உள்ளிட்டவையும், 2, 3ஆம் நாள் பகலில் சிறப்பு பூஜைகள், இரவில் இந்து சமய மாநாடும் நடைபெறும்.

4ஆம் நாளான 26ஆம் தேதி காலையில் சுகிா்த ஹோமம் உள்ளிட்ட பூஜைகள், மாலையில் விசேஷ உறியடி, இரவில் பஜனை, ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியையொட்டி அஷ்டாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். 5ஆம் நாள் விழாவில் சிறப்பு பூஜை, லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்டவை நடைபெறும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments