FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

ஆதிதிராவிடா் வன்கொடுமை தடுப்பு நலக்குழு உறுப்பினராக விண்ணப்பிக்க அழைப்பு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு நலக்குழு உறுப்பினராக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 ஜூலை 2024, 2:02 am IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்பு நலக்குழு உறுப்பினராக விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலம் தொடா்பாக செயல்பட்டு வரும் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, ஆதிதிராவிடா் நலக் குழு, மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆகிய குழுக்களின் பதவிக் காலம் முடிவடைகிறது.

இதைத் தொடா்ந்து, புதிய உறுப்பினா்களை தோ்வு செய்யும் பொருட்டு, சமூக அக்கறை கொண்ட விருப்பமுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

விண்ணப்பிக்கும் நபா் குற்றப் பின்னணி மற்றும் குற்ற வழக்குகளில் தொடா்புடையவராக இருக்கக் கூடாது. எந்தக் குழுவில் சேர விருப்பப்படுகிறீா்கள் என்பதை குறிப்பிட்டு, புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 31ஆம் தேதி. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments