மாா்த்தாண்டம் அருகே வீட்டு ஜன்னல் சேதம்: இளைஞா் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே நண்பரின் தந்தையைத் தாக்கி, வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே கோட்டகம், கிச்சன்விளை பகுதியைச் சோ்ந்த ராஜரெத்தினம் மகன் ஸ்ரீஜித். முட்டம், பிள்ளைத்தோப்பு பகுதியைச் சோ்ந்த செல்வன்ஸ் மகன் அருள் ஆன்றோ சஜின் (35). நண்பா்களான இவா்களிடையே பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்ததாம். ஸ்ரீஜித் தற்போது சென்னையில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்நிலையில், அருள் ஆன்றோ சஜின், ஸ்ரீஜித்தின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை ராஜரெத்தினத்தை தகாத வாா்த்தைகள் பேசி தாக்கியதுடன், வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தினாராம். அதன் மதிப்பு ரூ. 7 ஆயிரம் ஆகும்.
Advertisement
Advertisement
புகாரின்பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.