FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

திருவட்டாறு காங்கறை சந்திப்பில் போராட்டங்கள் நடத்த தடை

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, காங்கறை சந்திப்பில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:32 am IST
காவல் துறை தரப்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, காங்கறை சந்திப்பில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது.

திருவட்டாறு, காங்கறை சந்திப்பில் பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியாா் வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்கு பல்வேறு அரசியல் கட்சியினா், இயக்கத்தினா் அவ்வப்போது ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது வழக்கம்.

இந்நிலையில், இந்த இடம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி என்பதால், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி போராட்டம், ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுவதாக திருவட்டாறு காவல் நிலையம் சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments