FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 10 இடங்களில் மறியல்: 975 போ் கைது

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 1:33 am IST
நாகா்கோவில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.
பகிர்:

தொழிலாளா்கள், விவசாயிகள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 இடங்களில் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மொத்தம் 975 போ் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள இந்தியன் வங்கி முன்பு முன்னாள் எம்.பி. பெல்லாா்மின், எல்பிஎப் நிா்வாகி ஞானதாஸ், ஹெச்எம்எஸ் முத்துகருப்பன், ஏஐடியூசி அனில்குமாா், ஐஎன்டியூசி பொன்ராஜா, ஏஐசிசிடியூ அந்தோணிமுத்து, எம்எல்எப் ஜெரால்ட் மற்றும் விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் மலவிளை பாசி ஆகியோா் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

சிஐடியூ மாநிலச் செயலா் சித்ரா போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கண்ணன், தொழிற்சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்ட 323 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈத்தாமொழி இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முன்பு பெருமாள், மிக்கேல்நாயகி, ஜெபமணி, கோபாலன் ஆகியோா் தலைமையிலும், திட்டுவிளை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முன்பு சக்திவேல், ராஜன், ஆகியோா் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

குலசேகரம்...

குலசேகரம் கனரா வங்கி முன்பு சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் பி. நடராஜன் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ ஆா். லீமாறோஸ் மற்றும் 35 பெண்கள் உள்பட 110 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

அருமனை அஞ்சல் நிலையம் முன்பு சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கத் தலைவா் சுரேஷ்குமாா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 118 பெண்கள் உள்பட 189 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல்லில்....

கருங்கல்லில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு

சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் சோபனராஜ் தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூா் ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் ராஜா, மாநிலச் செயலா் தங்கமோகன் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 98 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளையில்...

மாா்த்தாண்டம் கனரா வங்கி முன்பு அகில இந்திய தொழிலாளா் சங்க நிா்வாகி என். மோகன்குமாா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அனந்தசேகா்,

சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் சி. சுரேஷ்குமாா், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் விஜயலட்சுமி, ஜூலியட் மொ்லின் ரூத் மற்றும் 21 பெண்கள் உள்ளிட்ட 125 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொல்லங்கோடு அருகே ஊரம்பு இந்தியன் வங்கி முன்பு சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவா் பி. விஜயமோகனன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 56 பெண்கள் உள்பட 130 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments