FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே 10 பவுன் நகை திருட்டு

புதுக்கடை அருகேயுள்ள சடையன்குழி பகுதியில் வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:45 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

புதுக்கடை அருகேயுள்ள சடையன்குழி பகுதியில் வீட்டிலிருந்த 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சடையன்குழி பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் (45). இவரது மகன், காப்புக்காட்டில் உள்ள பாட்டி பிரேமா வீட்டில் வசித்து வருகிறாா்.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஜஸ்டின், நடைக்காவு பகுதியில் உள்ள காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஜஸ்டின் வீட்டிற்கு சென்ற பிரேமா, பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டுபோனது தெரியவந்ததாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments