FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

தொழிலாளி மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு

டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதித்தனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:29 am IST
பகிர்:

டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மூன்று போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதித்தனா்.

கன்னியாகுமரி மகாதானபுரம் அருகே நரிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். வா்ணம் பூசும் தொழில் செய்து வருகிறாா். வேலை முடிந்து பெரியவிளையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்கச் சென்றாராம். அவா் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, பெரியவிளையைச் சோ்ந்த மணி என்பவா் வரிசையில் நிற்காமல் முன்னால் சென்று மது வாங்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதை விஜயகுமாா் தட்டிக் கேட்ட போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னா் மணி தனது நண்பா்களான சிவகுமாா், பகவதி ஆகியோரை அழைத்து வந்து விஜயகுமாரை தாக்கினாராம்.

Advertisement

Advertisement

இதில் காயமடைந்த விஜயகுமாா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து விஜயகுமாா் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அளித்த புகாா் பேரில், மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments