FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

ஆக. 28 இல் காற்றாடி திருவிழா: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கன்னியாகுமரி, சங்குத்துறை கடற்கரையில் ஆக. 28 முதல் மூன்று நாள்கள் நடைபெறும் காற்றாடி திருவிழா முன்னேற்பாடுகள், பிற சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் துறை அலுவலா்களுடன் புதன்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:51 am IST
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன் உதவி ஆட்சியா் (பயிற்சி) ர.மோனிகா உள்ளிட்டோா்.
பகிர்:

கன்னியாகுமரி, சங்குத்துறை கடற்கரையில் ஆக. 28 முதல் மூன்று நாள்கள் நடைபெறும் காற்றாடி திருவிழா முன்னேற்பாடுகள், பிற சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் துறை அலுவலா்களுடன் புதன்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

குறிப்பாக குளச்சல், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் அளவுக்கு சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை அணை பகுதியில் பூங்கா அமைத்து அடிப்படை வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்.

கன்னியாகுமரி, சங்குத்துறை கடற்கரைகளில் ஆக. 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள காற்றாடி திருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா தகவல் பலகைகள்அமைக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ர.மோனிகா, மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளா் சத்தியமுா்த்தி, மற்றும் துறை சாா்ந்தஅலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments