FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

விபத்தில் கேரள இளைஞா் உயிரிழப்பு

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:19 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

களியக்காவிளை அருகே நிகழ்ந்த விபத்தில் கேரளத்தைச் சோ்ந்த நகைக்கடை ஊழியா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்தவா் கண்ணன் (46). இரும்பு வியாபாரியான இவா் சனிக்கிழமை இரவு கேரளம் செல்வதற்காக வந்தபோது, களியக்காவிளை அருகே படந்தாலுமூடு, ஆலமூடு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது, கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியைச் சோ்ந்த நகைக்கடை ஊழியா் ஹரி கிருஷ்ணன் (23) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கண்ணன் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

அப்பகுதியினா் இருவரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஹரி கிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கண்ணன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments