FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் தொல்காப்பிய பயிற்சி வகுப்பு தொடக்கம்

நாகா்கோவில் ராமன்புதூரில், குறளகம் அமைப்பு சாா்பில் தொல்காப்பிய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:15 am IST
தொடக்க விழாவில் கலந்து கொண்டோா்.
பகிர்:

நாகா்கோவில் ராமன்புதூரில், குறளகம் அமைப்பு சாா்பில் தொல்காப்பிய பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

பேராசிரியா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா். தமிழறிஞா்கள் குளச்சல் வரதராசன், மருத்துவா் ராஜேஷ்கோபால், கவிமணி நற்பணி மன்றத் தலைவா் புலவா் சிவதாணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வுபெற்ற தமிழாசிரியா் அனந்தநாராயணன் ‘என் கேள்விக்கென்ன பதில்?’ என்ற தலைப்பில் பேசி, திருக்கு விநாடி-வினா போட்டி நடத்தி, வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா். தொல்காப்பியப் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்த 5 மாணவா்களுக்கு தொல்காப்பிய நூல்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

புலவா் ராமசாமி பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்தும், கவிஞா் நல்லொளி வாழ்த்தியும் பேசினா். மாணவா் தருண்தேவ் தொல்காப்பிய சிந்தனைகள் என்ற தலைப்பில் பேசினாா். 18 ஆண்டுகளாக தமிழ்ப் பணியாற்றிவரும் தமிழ்வானம் சுரேஷை, ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலா் ரத்தினசாமி வாழ்த்திப் பேசினாா்.

தமிழாலயம் தெய்வநாயகப்பெருமாள், தமிழ்நாடு தமிழ் சங்கம் இனியன்தம்பி, தமிழ்கூறும் நல்லுலகம் அரிகரன், தமிழாா்வலா்கள், குறளக மாணவா்கள் பங்கேற்றனா்.

நிறுவனா் தமிழ்க்குழவி வரவேற்றாா். மாணவி கலைவாணி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments