FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

புத்தளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நாகா்கோவிலை அடுத்த புத்தளத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

23 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
நெல் - நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

நாகா்கோவிலை அடுத்த புத்தளத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

கன்னிப்பூ அறுவடையைத் தொடா்ந்து குமரி மாவட்டம் முழுவதும் சுமாா் 25 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் உறுதியளித்திருந்தாா். அதன்படி,

புத்தளம் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சிக்கு, நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா். சகாயம் முன்னிலை வகித்தாா்.

பாசன சங்க தலைவா் வின்ஸ் ஆன்றோ கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பேசும்போது, கடந்த ஆண்டு 10 நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்த நிலையில், பாசன சங்க நிா்வாகிகளின் தொடா் முயற்சியால், நிகழாண்டு கூடுதலாக 15 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. விவசாயிகள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், துணை மண்டல மேலாளா் ராமச்சந்திரன், பாசன சங்க

மாவட்டக் குழு உறுப்பினா்கள் தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள், பறக்கின்கால் தலைவா் ரவீந்திரன், உறுப்பினா்கள் ஸ்ரீகிருஷ்ணபெருமாள், ஜெயசிங், டோனி பெலிக்ஸ், ஜஸ்டின், விவசாயிகள் துவரங்காடு ராஜேஷ், புத்தேரி ஜாபா்சேட், முருகேசன் மற்றும் கொள்முதல் நிலைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments