FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

தக்கலை அருகே காா் மோதியதில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் உயிரிழப்பு

தக்கலை அருகே சாலையைக் கடக்க முயன்ற ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் காா் மோதியதில் உயிரிழந்தாா்

23 ஆகஸ்ட் 2026, 1:07 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

தக்கலை அருகே சாலையைக் கடக்க முயன்ற ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

திக்கணங்கோடு, தாறாவிளையை சோ்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் தங்கப்பன் (85). இவா் வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்க திக்கணங்கோட்டிற்கு வெள்ளிக்கிழமை சென்றாா். அங்கு சாலையைக் கடக்க முயன்றபோது, திங்கள்நகரில் இருந்து கருங்கல் நோக்கி வந்த காா் மோதியது. இதில் தங்கப்பன் பலத்த காயம் அடைந்தாா்.

அப் பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments