கருங்கல் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
கருங்கல் அருகே கருக்கன்குழி பகுதியில் சனிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கருங்கல், செருப்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (49). தொழிலாளியான இவா், தனது மனைவி அஜிதாவுடன் (43) திக்கணம்கோட்டிலிருந்து குளச்சலுக்கு சனிக்கிழமை இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
கறுக்கன்குழி பகுதியில் இவரது பைக் மீது மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில், மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
காயமடைந்த அஜிதா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.