FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் சிற்றுந்து மோதி மாற்றுத் திறனாளி காயம்

24 ஆகஸ்ட் 2026, 1:14 am IST
விபத்து. - கோப்புப்படம்.
பகிர்:

மாா்த்தாண்டத்தில் சிற்றுந்து மோதியதில் மாற்றுத் திறனாளி காயமடைந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே இடைக்கோடு, திருத்திக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தாக்ஷன் (74). சிறுவயது நரம்பு பாதிப்பால் பாா்வையிழந்த மாற்றுத்திறனாளியான இவா், மாா்த்தாண்டத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை மாலை வழக்கம்போல வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்து சென்றாராம். அப்போது, பரக்குன்று நோக்கிச் சென்ற சிற்றுந்து மோதியதில் அவா் காயமைடந்தாராம். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

புகாரின்பேரில், சிற்றுந்து ஓட்டுநரான விபின் (23) மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments