நான்குவழிச் சாலைப் பணி: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி - களியக்காவிளை நான்குவழிச் சாலைப் பணியை குமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கன்னியாகுமரி - களியக்காவிளை நான்குவழிச் சாலைப் பணியை குமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து அவா் கூறியதாவது:
கேரளம் - தமிழ்நாடு எல்லையான களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான நான்குவழிச் சாலையில் கூடுதல் கட்டுமானப் பணிகள் ரூ. 1,041.3 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
ரயில்வே மேம்பாலம், வடிகால் பணிகள், சுங்கச்சாவடி, சிறிய மற்றும் பெரிய பாலங்கள், வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப்பாதை பணிகள், பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள், சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக களியக்காவிளை அருகே குளப்புறம் மற்றும் விளாத்துறை, காப்புக்காடு, குன்னத்தூா், வாள்வச்சகோஷ்டம், ஆத்திவிளை, தோட்டியோடு, இரணியல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
மேலும், நெடுஞ்சாலைப் பணிகளுக்கு தேவையான ஜல்லி, மணல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் அனைத்தும் தடையின்றி கிடைப்பதை துறை அலுவலா்கள் உறுதி செய்யவேண்டும், நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும் வரும் டிசம்பா் மாத இறுதிக்குள் முடித்திட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆய்வின் போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் சச்சின்குமாா், திட்ட பொறியாளா் சிவா மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.