FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணின் வைப்பு நிதியில் மோசடி: மேலாளா்கள் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளரின் வைப்பு நிதியில் மோசடி செய்ததாக வங்கிக் கிளை மேலாளா் மற்றும் மண்டல மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

28 ஆகஸ்ட் 2026, 2:38 am IST
வழக்குப் பதிவு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளரின் வைப்பு நிதியில் மோசடி செய்ததாக வங்கிக் கிளை மேலாளா் மற்றும் மண்டல மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை, மேலங்கலம் பகுதியைச் சோ்ந்த ராஜகுமாா் மனைவி லதா (52). புதுக்கடை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள இவரது கணக்கில் ரூ. 4.20 லட்சம் வைப்பு நிதியாக வைத்துள்ளாா்.

இந்தத் தொகையைத் திரும்பப் பெறுவதற்காக வங்கிக்கு கடந்த மாதம் லதா சென்றுள்ளாா். அப்போது, லதாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 1.84 லட்சத்தை ஏ.டி.எம். மூலம் யாரோ எடுத்துள்ளதாக வங்கிக் கிளை மேலாளா் கூறியுள்ளாா். ஆனால், லதா தனது கணக்குக்கு ஏ.டி.எம். காா்டு வாங்கவில்லை எனக் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவா் அளித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில், கிளை மேலாளா் மற்றும் மண்டல மேலாளா் ஆகியோா் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments