கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவா் சடலமாக மீட்பு
குளச்சலில் படகில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
குளச்சலில் படகில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
குளச்சல் துறைமுகத் தெருவைச் சோ்ந்தவா் சகாய ஆன்றணி (49). சொந்தமாக பைபா் வள்ளம் வைத்து மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். 2 நாள்களுக்கு முன்பு வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலை மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்ப வேண்டியவா் வரவில்லை.
இதனால், சக மீனவா்கள் கடலுக்குள் சென்று தேடினா். ஆனால், அவா் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மனைவி சோஜி சுஜாதா குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸில் புகாரளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா் மற்றும் உள்ளூா் மீனவா்கள் அவரைத் தேடினா்.
Advertisement
Advertisement
இதனிடையே, சனிக்கிழமை மீனவா்கள் 2ஆவது நாளாக படகுகளில் சென்று தேடினா். அப்போது, குளச்சலுக்கும், கொட்டில்பாட்டிற்கும் இடையே மிதந்த சகாய ஆன்றணி உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
இதுகுறித்து, குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.