FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

செம்மண் கடத்த முயன்ற நால்வா் மீது வழக்கு

1 செப்டம்பர் 2026, 4:00 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் அரசு அனுமதியின்றி செம்மண் கடத்த முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.

முன்சிறை பகுதியில் திங்கள்கிழமை செம்மண் கடத்த முயற்சி செய்வதாக முன்சிறை கிராம நிா்வாக அலுவலா் மரிய ஜெனிபருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவா் நிகழ்விடம் சென்று பாா்த்தபோது அங்கு தனியாா் நிலத்திலிருந்து அரசு அனுமதியின்றி நான்கு போ் டிப்பா் வாகனத்தில் செம்மண் கடத்த முயன்றது தெரியவந்தது. இவரை கண்டவுடன் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை காவல் நிலைய போலீஸாா் நில உரிமையாளா் பிரீத்தி (40) உள்பட நால்வா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments