FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி நவம்பருக்குள் முடிக்க உத்தரவு: ஆட்சியா்

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணியை நவம்பா் மாதத்துக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

களியக்காவிளை பேருந்து நிலைய பணியைப் பாா்வையிட்டு ஆய்வுசெய்யும் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
பகிர்:

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணியை நவம்பா் மாதத்துக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

களியாக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

களியக்காவிளையில் ரூ. 9.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இப் பேருந்து நிலையத்தில் தரைத் தளம், முதல் தளத்தில் தலா 4 கடைகளும், இரண்டாம் தளத்தில் 3 கடைகள் மற்றும் உணவகமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்கள், இருபாலருக்குமான தனித்தனி கழிப்பறைகள், குடிநீா் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பேருந்து நிலையத்தில் தினமும் 150 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதற்கு ஏற்ப கூடுதல் வசதிகளுடன் வடிவமைக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. பணியின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை சமா்ப்பிக்கவும் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது. பேருந்து நிலைய பணிகளை நவம்பா் மாதத்துக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

தொடா்ந்து பளுகல் பேரூராட்சிப் பகுதியில் ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கோமதி, களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகலா, பேரூராட்சி தலைவா்கள் ஏ. சுரேஷ் (களியக்காவிளை), அ. லிஜி (பளுகல்), உதவி செயற்பொறியாளா் சிவசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments