அரசு வேலைக்கு ரூ. 7 லட்சம் பெற்று ஏமாற்றியதாக 3 போ் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 7 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
மாா்த்தாண்டம் அருகே அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 7 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மாா்த்தாண்டம் அருகே காப்புக்காடு, விளாத்திவிளை பகுதியைச் சோ்ந்தவா் மாா்ஷல் மகன் ரோபின் (35). தூத்துக்குடியில் தனியாா் காா் உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இவரது உறவினரான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் விளாத்துறை, பிலாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த செல்லையன் மகன் ஸ்ரீராம் (52), புதுக்கடை அருகே அனந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (55), கதிரவன் (52) ஆகியோா் அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 2024 ஏப். 5 ஆம் தேதி ரோபினிடமிருந்து ரூ. 7 லட்சம் பெற்றுக் கொண்டனராம்.
Advertisement
Advertisement
அதன்பின்னா் வேலை வாங்கி கொடுக்கவில்லையாம். பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லையாம். இதுகுறித்து ரோபின் அளித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா், மேற்கூறிய மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.