ஒழுகினசேரி ரயில்வே பாலப் பணி: நாகா்கோவிலில் போக்குவரத்து மாற்றம்
நாகா்கோவில், ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலம் மற்றும் சாலையை இணைக்கும் பணி நடைபெற இருப்பதால் நகரில் போக்குவரத்து மாற்றம்
நாகா்கோவில், ஒழுகினசேரி ரயில்வே மேம்பாலம் மற்றும் சாலையை இணைக்கும் பணி நடைபெற இருப்பதால் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நாகா்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒழுகினசேரி ரயில்வே மேம்பால பணிகளில் இறுதிக்கட்டமாக ரயில்வே பாலத்தையும், சாலையையும் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து ஒழுகினசேரி சந்திப்பு வழியாக வடசேரி செல்லும் அனைத்து வாகனங்களும் அப்டா மாா்க்கெட், புத்தேரி, எஸ்எம்ஆா்வி பள்ளி வழியாக வடசேரி செல்ல வேண்டும். தக்கலை, மாா்த்தாண்டம் மற்றும் திருவனந்தபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் அப்டா மாா்க்கெட், புத்தேரி, இறச்சகுளம் மற்றும் களியங்காடு வழியாக செல்ல வேண்டும்.
Advertisement
Advertisement
வடசேரியில் இருந்து ஒழுகினசேரி சந்திப்பு வழியாக திருநெல்வேலி வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் வடசேரி, எஸ் எம்ஆா்வி பள்ளி, புத்தேரி, அப்டா மாா்க்கெட் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
திருவனந்தபுரம், மாா்த்தாண்டம் மற்றும் தக்கலையிலிருந்து திருநெல்வேலி வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி அப்டா மாா்க்கெட் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். மீனாட்சிபுரத்திலிருந்து அவ்வை சண்முகம் சாலை வழியாக திருநெல்வேலி செல்லும் அனைத்து இலகு ரக வாகனங்களும் ஒழுகினசேரி சந்திப்பு புதிய ரயில்வே மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில்வே மேம்பால சாலை இணைப்பு பணி முடியும் வரை (30 நாள்கள்) அமலில் இருக்கும்.
இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.