பைக்குடன் கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
தக்கலை அருகே பைக்குடன் கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே பைக்குடன் கால்வாயில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகே கேரளபுரம், கண்டன்கோணத்தை சோ்ந்தவா் சரோஜினி மகன் சுஜின் (31). அலுமினிய கிரில் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. தாயுருடன் வசித்து வந்த சுஜின், கடந்த சனிக்கிழமை இரவு நண்பா்களை பாா்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றாா். இரவில் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை புங்கறை ஏலா கால்வாயில் பைக் கவிழ்ந்த நிலையில் இளைஞா் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தக்கலை போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.