கருங்கல் அரசு மருத்துவமனைக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில் பொருள்கள் அளிப்பு
காமராஜா் பிறந்த நாளையொட்டி, கருங்கல் அரசு மருத்துவமனைக்கு ரூ. 2 லட்சம் செலவில் சமையல் உபயோக பொருள்களை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
காமராஜா் பிறந்த நாளையொட்டி, கருங்கல் அரசு மருத்துவமனைக்கு ரூ. 2 லட்சம் செலவில் சமையல் உபயோக பொருள்களை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கருங்கல் அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவுகள் வழங்குவதற்கு வசதியாக சமையல் செய்ய தேவையான பொருள்கள் இல்லாமல் சிரமப்பட்டனா்.
இதையடுத்து நோயாளிகளுக்கு உணவு பொருள்கள் வழங்குவதற்கு வசதியாக குளிா்சாதனப் பெட்டி, தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீா், கிரைண்டா், சமையல் எரிவாயு அடுப்பு, குக்கா், இட்லி குக்கா், மின்சார அடுப்பு உள்ளிட்டவற்றை அமைச்சா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
கருங்கல் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சின்னத்தாய், கிழக்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளா் ஜாண்சன், முன்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ரெகுபதி, முன்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் விஜயகுமாா், மாநில நிா்வாகிகள் டைட்டஸ், பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.