FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு, உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை 2026, 2:04 am IST
போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
பகிர்:

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு, உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

இக்கல்லூரியின் சமூக மருத்துவத் துறை, போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, உன்னத் பாரத அபியான் திட்டம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் கல்லூரி வளாகத்திலிருந்து அரசு மூடு சந்திப்பு வரை, மாணவ மாணவியா்கள் போதை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணியாக சென்றனா்.

Advertisement

Advertisement

பேரணியை, குலசேகரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரவணகுமாா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் டாக்டா் என்.வி. சுகதன், கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா் எம்.சி. பவ்யா, துறைத் தலைவா்கள் டாக்டா் சதீஷ் குமாா், அஜித்குமாா், இளநிலை படிப்பு ஒருங்கிணைப்பாளா் சிஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரச மூடு சந்திப்பில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments