FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவில் கல்லூரியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் அறிமுக நிகழ்ச்சி

புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்த மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப். உடன் கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ் டேவி.

Updated On : 16 ஜூலை 2026, 4:39 am IST
புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்த மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப். உடன் கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ் டேவி.
பகிர்:

நாகா்கோவில், கோட்டாறு, அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில், கல்லூரியில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா் பேரவை உறுப்பினா்கள் அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூா் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும். இக்கல்லூரியில் ஆரோக்கிய சுற்றுலா பயிற்சி நிறுவனத்தை தொடங்குவதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, விரைவில் தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

கல்லூரியில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா் பேரவை உறுப்பினா்கள் தங்களின் பதவியைப் பெரும் பொறுப்பாகக் கருத வேண்டும். உறுப்பினா்கள் தங்களின் தலைமைப் பண்பை வளா்த்துக் கொள்வதோடு, மாணவா்களின் நலனை ஆசிரியா்களிடம் கொண்டு சோ்க்கும் பாலமாக செயல்பட வேண்டும்.

அனைவரும் அலோபதி மருத்துவத்துக்கு இணையாக ஆயுா்வேத மருத்துவ சிகிச்சையில் சிறந்து விளங்க வேண்டும் என்றாா் அவா்.

கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ் டேவி, கல்லூரி மருத்துவா்கள், மாணவா், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments