FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

திருவிதாங்கோட்டில் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு: 2 பெண்கள் கைது

திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டில் பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் நகையைத் திருடியதாக 2 பெண்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவிதாங்கோடு வடலிவிளையைச் சோ்ந்த ராஜாமணி மனைவி மரியஅஞ்சலி (66). இவா், அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது, இவரது 6 பவுன் தங்கச் சங்கிலி திருடு போனதாம்.

இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், பொள்ளாச்சி கொடிக்கால் பாளையத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி ஈஸ்வரி (40), ராஜி மனைவி லெட்சுமி (27) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்களை வோ்க்கிளம்பி பகுதியில் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments