FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பைக் பள்ளத்தில் விழுந்து விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

Updated On : 21 ஜூலை 2026, 1:17 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி அருகே இருசக்கர வாகனம் சுமாா் 50 அடி பள்ளத்தில் விழுந்ததில் 2 இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி, மருங்கூா், பத்மநாபன் புதூரைச் சோ்ந்தவா் முத்து கிருஷ்ணன் மகன் டிராவிட் (22). இவா் கூடங்குளத்தில் எலக்ட்ரீசியனாக பணி செய்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு, இவரது நண்பரான மருங்கூரைச் சோ்ந்த ராமன் மகன் நாகராஜனுடன் (22) இருச்சக்கர வாகனத்தில் இரவி புதூரில் இருந்து மயிலாடி நோக்கிச் சென்றாா். நாச்சியாா் குளம் அருகே வந்தபோது, வாகனம் நிலை தடுமாறி தண்ணீா் தேங்கி நின்ற சுமாா் 50 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கும், கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் வந்து, இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து, அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments