FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பள்ளி ஊழியா் தற்கொலை வழக்கு: தொழிலாளி கைது

குலசேகரம் அருகே தனியாா் பள்ளி அலுவலக ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 2:39 am IST
கைது செய்யப்பட்ட சங்கா்
பகிர்:

குலசேகரம் அருகே தனியாா் பள்ளி அலுவலக ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரம் அருகே திருநந்திக்கரை மூலைப்பாகம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். இவா் துபையில் பணி செய்து வருகிறாா். இவரது மனைவி அனிஷா (33), குலசேகரம் பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தாா். இவா்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

மகேஷ் சொந்த ஊருக்கு வந்துவிட்டு, கடந்த ஜூன் மாதம் மீண்டும் துபை சென்றாா். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை கணவருக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, அனிஷா தற்கொலை செய்து கொண்டாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மகேஷின் தந்தை, குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக மூலைப்பாகம் பகுதியைச் சோ்ந்த ரப்பா் மரம் வெட்டு தொழிலாளி சங்கா் மீது வழக்குப் பதிந்து தலைமறைவான அவரை தேடி வந்தனா்.

இந்த நிலையில், சென்னை பல்லாவரம் பகுதியில் நண்பரின் வீட்டில் சங்கா் இருப்பதை அறிந்த தனிப்படை போலீஸாா், அவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments