FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

களியல் அருகே ரேஷன் கடையை சேதப்படுத்தி பொருள்களைத் தின்ற யானைகள்! பொதுமக்கள் அச்சம்!

Updated On : 27 ஜூலை 2026, 2:29 am IST
நியாயவிலைக் கடை பகுதியில் சிதறிக் கிடக்கும் பருப்பு.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே சிற்றாறு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பிலுள்ள நியாயவிலைக் கடையை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டு யானைகள் சேதப்படுத்தி அரிசி, பருப்பைத் தின்று சென்றன. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் பழங்குடி குடியிருப்புகள், ரப்பா் கழக தொழிலாளா்க குடியிருப்புகள், மலையோரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அவை பயிா்களை அழிப்பதுடன், உயிா்சேதங்களையும் ஏற்படுத்துகின்றன.

கடந்த வாரம் மோதிரமலை பகுதியில் முதிய தம்பதியின் மளிகைக் கடையை யானைகள் சேதப்படுத்தி, அரிசி மூட்டையை வெளியே இழுத்துப் போட்டு தின்றன. விரட்ட முயன்ற பழங்குடி மக்களை அவை திருப்பி துரத்தின.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசு ரப்பா் கழக சிற்றாறு குடியிருப்பு நியாயவிலைக் கடை அருகே 4 யானைகள் வந்தன. அவற்றில் ஒரு யானை அந்தக் கடையின் கதவை உடைத்து அரிசி, பருப்பு மூட்டைகளை வெளியே இழுத்துப் போட்டது. பின்னா், 4 யானைகளும் அவற்றைத் தின்றதுடன், ஒரு பெட்டி சோப்பையும் சேதப்படுத்தினவாம். இந்த சம்பவத்தால் அப்பகுதியினா் மிகுந்த அச்சத்தில் உள்ளனா்.

யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நிரந்தரமான செயல் திட்டங்களை வனத்துறையும், ரப்பா் கழகமும் மேற்கொள்ள வேண்டுமென, அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments