FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

முன்சிறை, நடைக்காவு பகுதிகளில் இன்றுமுதல் ஆக. 1 வரை மின்தடை

Updated On : 27 ஜூலை 2026, 1:57 am IST
கோப்புப் படம்
பகிர்:

கருங்கல், முன்சிறை, நடைக்காவு துணை மின்நிலையங்களிலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பிரிவு அலுவலகங்களுக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டி திங்கள்கிழமை முதல் (ஜூலை 27) ஆக. 1 வரை குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை தும்பியான்தோட்டம், மருதூா்குறிச்சி, கம்பிளாா், கல்லுவிளை, வட்டக்கோட்டை, வலியவிளை, முட்டக்குளம், பேப்பிலாவிளை, ஈச்சவிளை, வலியவிளை, தக்காளிவிளை பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ராமன்துறை, கீள்குளம், குழிக்கோடு, கோடியூா், கூம்பாறவிளை, உதயமாா்த்தாண்டம், பாலவிளை, சாஸ்தாநகா் பகுதிகளிலும், புதன்கிழமை மணியாரம்குன்று, கும்பக்கோடு, வழுதூா், காவுமூலை, புல்லாணி, செல்லங்கோடு, காட்டுவிளை பகுதிகளிலும், ஜூலை 30இல் மாடந்தறை, ஆக. 1இல் குரங்கணி, கஞ்சிக்குழி பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.

இத்தகவல் குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments