FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பருத்திவிளை பகுதியில் சாலைப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

பருத்திவிளை பகுதியில் ரூ.2.03 கோடியில் நடைபெற்றுவரும் சாலை விரிவாக்கப் பணியை மாவட்ட ஆட்சியா்மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 29 ஜூலை 2026, 2:02 am IST
சாலை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், பருத்திவிளை பகுதியில் ரூ.2.03 கோடியில் நடைபெற்றுவரும் சாலை விரிவாக்கப் பணியை மாவட்ட ஆட்சியா்மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள்,புதிய சாலைகள் அமைக்கும் பணிகள், சாலைப் போக்குவரத்தினை எளிதாக்கும் வகையில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

அதனடிப்படையில், விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.03 கோடிமதிப்பில் பருத்திவிளை முதல் அனந்தநாடாா் குடியிருப்பு வரை சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை, விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

நெடுஞ்சாலைத் துறை கோட்ட செயற்பொறியாளா் சத்தியமூா்த்தி, பொறியாளா்கள் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments