FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

அருமனை அருகே 65 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலைப் பொருள்களுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:39 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலைப் பொருள்களுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அருமனை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை ஒருவா் பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக காவல் நிலைய ஆய்வாளா் கமலாதேவிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அருமனை தச்சூா் கோணம் பகுதியில் அனிஷ் (31) என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா். அங்கு 65 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் கைப்பற்றி, அனீஷை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments