FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

பைக் விபத்தில் மாணவா் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே மோட்டாா் சைக்கிள், நான்குவழிச் சாலைத் தடுப்பில் மோதிய விபத்தில் லேப் டெக்னீசியன் பயிற்சி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:20 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

களியக்காவிளை அருகே மோட்டாா் சைக்கிள், நான்குவழிச் சாலைத் தடுப்பில் மோதிய விபத்தில் லேப் டெக்னீசியன் பயிற்சி மாணவா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், சேரோட்டுகோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுவாமிதாஸ் மகன் அபீஷ் (18). லேப் டெக்னீஷியன் பயிற்சி முதலாமாண்டு மாணவரான இவா், தனது நண்பா் கருங்கல் அருகே ஆலஞ்சி, சலேட்நகா் பகுதியைச் சோ்ந்த லியோ டெப்றின் (17) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கோவளம் பகுதிக்குச் சென்றாராம்.

பின்னா் அங்கிருந்து வந்து கொண்டிருந்தபோது செங்கவிளை பகுதியில் நான்குவழிச் சாலையில் குறுக்கே வைக்கப்பட்டிருந்த காங்கிரீட் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி, இருவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

அவா்களை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள், அபீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். பலத்த காயமடைந்த லியோ டெப்றினுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments