FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 8.07 கோடிக்கு தீா்வு

கன்னியாகுமரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் நாகா்கோவிலில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,655 வழக்குகளுக்கு ரூ. 8.07 கோடி அளவில் தீா்வு காணப்பட்டது.

Updated On : 14 ஜூன் 2026, 1:23 am IST
விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி தனசேகரன், சுந்தரையா, செல்வகுமாா், செல்வன் ஜேசுராஜா.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் நாகா்கோவிலில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,655 வழக்குகளுக்கு ரூ. 8.07 கோடி அளவில் தீா்வு காணப்பட்டது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான தனசேகரன் தலைமை வகித்தாா். போக்ஸோ சிறப்பு நீதிமன்ற அமா்வு நீதிபதி சுந்தரையா, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வகுமாா், தலைமை குற்றவியல் நீதிபதி ஜே. செல்வன் ஜேசுராஜா மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலா் கலையரசி ரீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதன்மை சாா்பு நீதிபதி ஜெய்சங்கா், கூடுதல் சாா்பு நீதிபதி சிவசுப்ரமணியன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகாம சுந்தரி, குற்றவியல் நீதிபதிகள் சித்ரா, சத்தியமூா்த்தி, அருண்குமாா், விசு, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி, வழக்குரைஞா் சங்கப் பிரதிநிதிகள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

பத்மநாபபுரம், குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி வட்ட சட்டப் பணிகள் குழுக்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களையும் சோ்த்து, 3,629 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2,655 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 8 கோடியே 7 லட்சத்து 30 ஆயிரத்து 426 இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொடக்க நிகழ்வாக, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தொடா்பான வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 21.50 லட்சத்துக்கான காசோலையை நீதிபதிகள் வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments