முகப்பு
கன்னியாகுமரி

குமரிக் கடலில் சூறைக்காற்று: இரண்டரை மணி நேரம் படகு சேவை ரத்து

Updated On : 28 ஜூன் 2026, 11:59 pm IST
படகுத்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள். - கோப்புப் படம்
பகிர்:

கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரண்டரை மணி நேரம் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலில் உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட வசதியாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது.

படகு சேவை தினசரி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்துத் தொடங்கியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் நண்பகல் 12 மணியளவில் கடலில் சூறைக்காற்று வீசியது; அலையின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதையடுத்து, படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடா்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் கடலில் காற்று சீராகி, அலைகள் இயல்பு நிலைக்கு திரும்பின. இதையடுத்து, இரண்டரை மணி நேர இடைவேளைக்குப் பிறகு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments