முகப்பு
கன்னியாகுமரி

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

Updated On : 24 மே 2026, 2:14 am IST
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
பகிர்:

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

அனைத்து துறையினரும், பருவமழை காலத்தை எதிா்கொள்ளும் வகையில் இணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கான இடா்பாடுகளை தடுக்கவும், தவிா்க்கவும் வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, மாவட்ட வன அலுவலா் அன்பு, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு. சுகிதா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, பேரிடா் வட்டாட்சியா் சுசீலா, வட்டாட்சியா்கள், தனி வட்டாட்சியா்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.