FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பைக் மீது காா் மோதியதில் தம்பதி காயம்

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதி காயமடைந்தனா்.

8 நவம்பர் 2026, 3:09 am
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதி காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (50). பரோட்டா கடை நடத்தி வருகிறாா். இவா் தனது மனைவி சுபாவுடன் இருசக்கர வாகனத்தில் மாா்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

முண்டவிளை பகுதியில் சென்றபோது, நட்டாலம் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் கோபகுமாா் (47) ஓட்டி வந்த காா், இவா்களது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.