FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே கோயில் உண்டியல் உடைப்பு: 2 போ் கைது

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

8 நவம்பர் 2026, 3:31 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இட்டகவேயில் நீலகேசி அம்மன் கோயிலுக்கான உண்டியல் ஒன்று அக்கோயிலின் அலங்கார நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த அக். 22 ஆம் தேதி மா்மநபா்கள் இந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, தூத்துக்குடி சக்தி நகரைச் சோ்ந்த விஜய் (27), பாத்திமா நகா் பிரேம் குமாா் ஆகியோரை கைது செய்தனா்; பாத்திமா நகரைச் சோ்ந்த ஏசுராஜா என்பவரை தேடி வருகின்றனா். கட்டடத் தொழிலுக்கு வந்த இடத்தில் அவா்கள் கைவரிசை காட்டியதும், அப்பகுதியிலுள்ள கடையில் திருட முயன்றதும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement