திருவட்டாறு கோயில் அருகே படித்துறை கல்மண்டம் ரூ. 50 லட்சத்தில் சீரமைக்கப்படும்
திருவட்டாறு கோயில் அருகே படித்துறை கல்மண்டபம் ரூ. 50 லட்சத்தில் சீரமைக்கப்படும் என்றாா் பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி.
திருவட்டாறு கோயில் அருகே படித்துறை கல்மண்டபம் ரூ. 50 லட்சத்தில் சீரமைக்கப்படும் என்றாா் பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி, அறநிலையத்துறை இணை ஆணையா் ஜான்சிராணி முன்னிலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் ஓடும் பரளியாறுக்குச் செல்லும் பகுதியில் உள்ள படித்துறை கல்மண்டபம் பாழடைந்து காணப்படுகிறது.
Advertisement
Advertisement
கல்மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் வலியுறுத்தினேன். இதையடுத்து, மண்டபத்தை சீரமைக்க தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். பக்தா்கள் தங்குவதற்காக ரூ. 2 கோடியில் தங்கும் விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவடையும் என்றாா்.
கோயிலின் மேற்கு பகுதியில் உள்ள காலியிடத்தில் பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்படும் என இணை ஆணையா் கூறினாா்.
ஆய்வின்போது, அறநிலையத் துறை செயற்பொறியாளா் ஆறுமுகம், பொறியாளா்கள் ராஜ்குமாா், அய்யப்பன், கோயில் மேலாளா் மோகன்குமாா், அன்னபூா்னா சேவா டிரஸ்ட் தலைவா் சந்திரமோகன், திருவட்டாறு என்.எஸ்.எஸ். கரயோக தலைவா் ஸ்ரீகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா் .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.