கட்டடத் தொழிலாளி கொலை
திருவட்டாறு அருகே கட்டடத் தொழிலாளியை கொலை செய்த மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
திருவட்டாறு அருகே இலுப்பறக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதி (52) கட்டடத் தொழிலாளியான இவரது வீட்டின் அருகே இவரது மூத்த சகோதரி பாய் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இவா்களுக்குள் கடந்த 8 ஆண்டுகளாக வழிபாதை தொடா்பாக தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு பாயின் மகனான கட்டடத் தொழிலாளி முருகேசனுக்கும் (37) தாய்மாமனான ஜோதிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முருகேசன் கல்லால் ஜோதியை தாக்கினாா். இதில், நிகழ்விடத்திலேயே ஜோதி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஜோதியின் மகள் சந்தியா, திருவட்டாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டதுடன் முருகேசன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.